Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீயான் விக்ரமின் கோப்ரா பட இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர், கலாட்டாவான வீடியோவுடன் இதோ..

இயக்குனர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமான ஒருவர்.

இவர் இயக்கத்தில் முதலில் வெளியான டிமான்டி காலனி திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதன்பின் இவர் இயக்கிய இமைக்க நொடிகள் திரைப்படமும் ரசிகர்களிடையே இவரை மிகவும் பிரபலமாகியது.

மேலும் தற்போது இவர் சீயான் விக்ரம்-ஐ வைத்து கோப்ரா திரைப்படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியது முதல் ரசிகர்கள் அனைவரும் பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று இவருக்கு பிறந்தநாள் என்பதால் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கோப்ரா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ள பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது இயக்குனருக்கு வாழ்த்தை தெரிவித்து படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.