Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிகவும் மார்டனாக மாறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி - வாயடைத்து போன ரசிகர்கள், இதோ வீடியோ

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவி மூலமாக பலரும் தமிழ் திரையுலகில் நடிகராக, பின்னணி பாடகராக, காமெடியனாக அறிமுகமாகி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக அறிமுகமானவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி.

ஆம் கிராமிய பாடல்கள் பாடி அதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த செந்தில், சீசன் 6-ன் டைட்டிலை வென்றார். இதன்பின் இவரும், இவரின் மனைவி ராஜலட்சுமியும் தற்போது பல படங்களில் பின்னணி பாடகராக பாடி வருகிறார்கள். ஏன் விஸ்வாசம், சூரரை போற்று உள்ளிட்ட படங்களில் கூட செந்தில் பாடல்கள் பாடியுள்ளார்.

தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று இரவு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவில், மிகவும் மார்டன் உடையில் பங்கேற்றுள்ளார் ராஜலட்சுமி. இவரை பார்த்த நிகழ்ச்சியின் நடுவர்கள் அனைவருமே வியப்பில் வியந்தனர்.

இதோ அந்த ப்ரமோ வீடியோ...