தமிழ் சினிமா இசையமைப்பாளரை பாலோ செய்யும் ஹாலிவுட் பிரபலம் ஜஸ்டின் பீபர்- யார் தெரியுமா?
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் கலக்கியவர் ஜி.வி. பிரகாஷ்.
பின் நடிகர், பாடகர் என அடுத்தடுத்து பல துறையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய அவர் அண்மையில் ஒரு இன்டர்நேஷ்னல் ஆல்பம் பாடல் வெளியிட்டார்.
High and Dry என பெயரிப்பட்டுள்ள இந்த பாடலை ஏ.ஆர். ரகுமான் மற்றும் தனுஷ் அண்மையில் வெளியிட்டனர்.
தற்போது இந்த பாடல் பாப் பாடகர் ஜஸ்டின் பீபரால் விரும்பப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐஸ்டின் பீபர் டுவிட்டரில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை பாலோ செய்ய தொடங்கியுள்ளார்.
இது தெரிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.