திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார்.
உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டு அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் ரசிகர்களும் திரையுலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடிய எஸ்.பி.பி ஏக் துஜே கேலியே படத்தின் வெற்றிக்கு பின் அவர் மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்களை பாடி சாதனை படைத்தார்.
இதுவே அனைத்து பாடகர்களையும் விட அவர் பாடி சாதனை செய்த ஆல் டைம் ரெக்கார்டு ஆக கருதப்பட்டது.
You May Like This video
3Am3O5d8kZM