குளிர்காய்ச்சலில் கிடந்த போது எஸ்.பி.பி பாடிய பாடல் இதுதான்! முக்கிய பிரபலம் தேடிக்கொடுத்த வாய்ப்பு - பலரும் ரசித்த பாடல்
திரை இசை பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவரின் உடல் நிலை தற்போது மிகவும் கவலைகிடமாக உள்ளது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பன்முக திறமை கொண்டவர் தன் திறமையால், பாடல்களாலேயே இசைக்கு ஆராதனை செய்தவர். தெலுங்கு, கன்னடம் என மொழிகளில் பாட தொடங்கிய அவருக்கு தமிழில் முதலில் வெளியாகிய படம் என்றால் அடிமை பெண் திரைப்படம் தான்.
எம்.ஜி.ஆர் நடித்த இப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலே முதலாக ஒலித்தது. ஆனால் அவர் பாடிய முதல் பாடல் சாந்தி நிலையம் படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம் பெற்ற இயற்கை என்னும் இளைய கன்னி பாடல் தான்.
ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் இரண்டு பாடல்களிலுமே அவருக்கு ஜோடியாக பாடியது பாடகி சுசிலா தான்.
மேலும் எம்.ஜி.ஆரே அவருக்கு விரும்பிக் கொடுத்த பாடல் தான் `ஆயிரம் நிலவே வா’. இந்தப் பாடலை பாட எஸ்.பி.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, எஸ்.பி.பி குளிர் காய்ச்சலில் இருந்தாராம்.
ஆனாலும் எம்.ஜி.ஆர் அவரிடம் `ரெஸ்ட் எடு, நீ எத்தனையோ பேரிடம் எம்.ஜி.ஆர் பாடலுக்குப் பாடுகிறேன் எனச் சொல்லி இருப்பாய் மூணு நாளைக்குப் பிறகு நீயே வந்து பாடு!’ எனச் சொல்லி வாய்ப்பு கொடுத்தாராம்.