மூச்சுவிடாமல் பாடி அசத்திய எஸ்.பி.பியின் கேளடி கண்மணி படத்தின் மண்ணில் இந்த காதலின்றி பாடலை மறக்க முடியாது. இது தவிர இசைக்கருவிகள் மீட்டல் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாம்.
ஓவியங்கள் வரைதலிலும் அவருக்கு ஆர்வம் அதிகமாம். அதே வேளையில் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டாம். அப்போட்டிகளுக்கு ரசிகரான அவர் மருத்துவமனை படுக்கையில் இருந்த போதும் கூட IPAD மூலம் போட்டிகளை பார்த்து ரசித்தாராம்.
இதெல்லாம் இருந்த போதும் கிரிக்கெட் விளையாட்டின் வெறியர் எஸ்.பி.பி என்றே சொல்லலாம். அக்காலத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, தன் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசு அளித்தாராம்.
இதனால் எஸ்.பி.பி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாராம்.
You May Like This Video