Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எஸ்.பி.பியின் தற்போதைய நிலை என்ன - மருத்துவமனையில் இருந்து வெளிவந்த வீடியோ

தமிழில் திரையுலகில் முன்னணி பாடகராக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கொரோனா தொற்று ஏற்பட்டதால்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார் பாடகர் எஸ்.பி.பி.

நேற்று இரவு எஸ்.பி.பியின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருக்கிறது என தகவல்கள் வெளியானது. இந்த செய்தி திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தற்போது எஸ்.பி.பி.யின் மருத்துவமனைக்கு வெளியில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அவரின் உடல் நிலை எப்படி இருக்கிறது, அவர் நலமுடன் இருக்கிறாரா என தெரிந்துகொள்ள பலரும் மருத்துவமனையின் வெளியில் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.