Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Just In : எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெறும் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகை - கூடுதல் போலீசார் குவிப்பு

தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், சென்னையில் உள்ள பிரபல எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.

இவரின் உடல் நலம் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது என நேற்று இரவில் இருந்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெறும் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. எஸ்.பி.பி. மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

மேலும் மருத்துவமனையின் முன்பு குவித்துள்ள மக்களை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் விரைந்து வந்துள்ளார்கள்.

You May Like This video