Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எஸ்.பி.பியை காப்பாற்றுவது கடினம் - மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்

கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள பிரபல எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் முன்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

ஆனால் தற்போது எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது என தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் எஸ்.பி.பியின் உடல் நிலை குறித்து மருத்துவர் பூபதி ஜான் பேசியுள்ளார் :

எஸ்.பி.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சாதாரண அறிகுறிகளுடன் தான் இருந்தார். கொரோனா வைரஸ் அவரது உடல் முழுவதும் வேகமாகப் பரவ துவங்கியது. அதன்பின் அவருக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டன.

அதனை தொடர்ந்து, அவர் வெண்டிலேட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டார். அதன்பின் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதால், நுரையீரல் செய்யும் வேலையை செய்வதற்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அவருடைய உடலில் உள்ள மேலும் ஒருசில பாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.