Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இயக்குனர் பாரதிராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் வருகை..

பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்றால் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் சமீபத்தில் இவருக்கு கொரோனா சோதனை நெகடிவ் என வந்த பின்பும், மருத்துவமனையில் சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று திடீரென்று இவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக மருத்துவமனை சார்பாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தற்போது எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு அவரின் குடும்பத்தினர் வருகையை தொடர்ந்து. தற்போது இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் வருகை, பிரபலங்களின் திடீர் வருகை காரணமாக அங்கு பெரிய பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.