பாடகர் எஸ்.பிபி. அவர்களின் உடல்நிலை நேற்றில் இருந்து மிகவும் மோசமாக இருக்கிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எல்லாம் மிகுந்த கவலையில் உள்ளார்கள்.
அனைவரும் அவருக்காக பிராத்தனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மருத்துவமனையில் நேரில் எஸ்.பி.பியை பார்க்க வந்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, துக்கத்தில் என்னால் பேச முடியவில்லை என அழுதுள்ளார்.
எஸ்பிபி நலம் பெறுவதற்காக பல கோடிப்பேர் பிரார்த்தனை செய்தோம், ஆனால் பலன் கிடைக்கவில்லை, இன்னும் நம்பிக்கை உள்ளது அவன் திரும்பி வருவான் என கூறியுள்ளார்.