அதிகப்படியான உயிர்காக்கும் கருவிகள் மூலம் எஸ்.பி.பிக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது...
கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள பிரபல எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் முன்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
ஆனால் தற்போது எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது என தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் அதிகப்படியான உயிர்காக்கும் கருவிகள் மூலம் மருத்துவர்களால் மூலம் எஸ்.பி.பிக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது என தற்போது கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.