பாடகர் எஸ்.பி.பி அவர்கள் உடல்நிலை சரியாக மீண்டு வரவேண்டும் என்பது தான் அனைவரின் வேண்டுதலாக உள்ளது.
நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல் வர உடனே நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனை சென்று அவரை சந்தித்தார்.
இன்று காலை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர், இயக்குனர் பாரதிராஜாவும் வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, துக்கத்தில் இருக்கும் போது வார்த்தைகள் வராது.
பிராத்தனை செய்தோம் அதற்கு பலன் இல்லை, இன்னும் நம்பிக்கை இருக்கிறது அவன் மீண்டு வருவான் என பேசியிருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் RIP SPB என பதிவு செய்துள்ளார்.
#RIPSPB 1:04pm
— venkat prabhu (@vp_offl) September 25, 2020
You May Like This Video