Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனும் மகா பாடகன்... { 1946 - 2020 }

திரையுலகில் 1966ல் இருந்து 2020 வரை 54 ஆண்டுகள் நம்மை பாடலால் மகிழ்வித்து கொண்டிருந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவரின் மறைவு பலரையும் சோதனையில் ஆழ்த்தியிருக்கும். ஒருவின் இசையை கேட்டு ரசிகன் ஆனவர்கள் பலர், ஆனால் இவரின் பாடலுக்கு அந்த இசையும் ஓர் ரசிகன் தான். அப்படிப்பட்ட மகா பாடகரின் முழு வாழ்க்கையை ஒரு முறை திரும்பி பார்ப்போம்.

எஸ்.பி.பியின் ஆரம்ப கால வாழ்க்கை :

பாடகர் பாலசுப்பிரமணியம், எஸ். பி. சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா எனும் தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ்.பி. சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் ஆவார்கள். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய திரையுலகிற்கு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளம் வயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார்.இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார்.

டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது, ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே இசை போட்டிகள் பலவற்றையிலும் கலந்து கொண்டு பல பரிசுகளைப் வென்றுள்ளார். 1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி முதல் பரிசு தட்டி சென்றார்.

ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார் எஸ்.பி.பி. இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா, அனிருதா, பாஸ்கர், மற்றும் கங்கை அமரன், ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ்.பி.பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ்.பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ்.பி.பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ்.பி.பிக்கு முதல் போட்டி பாடல் பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.

அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966இல் "நகரே அதே ஸ்வர்க" என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ பாடலைப் பாடினார். இவர் முதன் முதலில் தமிழ் மொழியில் பாடியது, 1969 ஆம் ஆண்டு ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ௭ல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார்.

௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய பாடலை எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இயற்கையெனும் இளையக்கன்னி பாடலைப் பாடினார்.அதற்குப்பிறகு எம். ஜி. ராமச்சந்திரன் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே பாடலையும் பாடினார். மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் என்பவரால் கடல்பாலம் என்ற திரைப்படத்தில் "இ கடலும் மறு கடலும்" பாடலை பாடியதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

இவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார். இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார். இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார். தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.

இந்திய தேசிய விருதுகள் :

1996 - மின்சார கனவு = தங்க தாமரை{ தமிழ் }

1995 - சங்கீத சகர கனயோகி பஞ்சக்சற கவை = உமண்டு க்ஹுமண்டு கனகர் { கன்னடம் }

1988 - ருத்ரவீன = செப்பாழனி உண்டி {தெலுங்கு}

1983 - சாகர சங்கமம் = வேதம் அனுவனுவுன {தெலுங்கு}

1981 - ஏக் தூஜே கே லியே = தேரே மேரே பீச் மேனி {இந்தி}

1979 - சங்கராபரணம் = ஓம் கார நதானு{தெலுங்கு}

1966ஆம் ஆண்டு ஆரம்பித்த எஸ்.பி.பியின் பயணம் இந்திய திரையுலகில் சுமார் 50 ஆண்டு காலம் திரையுலகிற்காக தனது குரல் வலிமையின் மூலம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பல கோடி ரசிகர்களை சேர்க்க அயராமல் உழைத்தவர் நம் பாடகர், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு சினிஉலகத்தின் அஞ்சலி.