எஸ்.பி.பி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் உதயநிதி ஸ்டாலின்.. உருக்கமான பேச்சு
இன்று திரையுலக தினத்தில் கருப்பு நாள், ஆம் பாடும் நிலா எஸ்.பி.பி அவர்கள் இன்று உடல்நல குறைவு காரணமாக யாரும் எதிர்பாராத விதத்தில் உயிர் இழந்தார்.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தடைந்த உடலை மக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் திரையுலகில் இருந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியது " திரையுலகிற்கு இது ஈடுகட்ட முடியாத ஓர் இழப்பு. என் சரப்பாகவும், தி.மு.க கட்சியின் தலைவர் சார்பாகவும், எஸ்.பி.பி அவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து கொள்ளகிறேன் " என கூறியுள்ளார்.