Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று காலை கூட உங்கள் பாடலை கேட்டு தான் எழுந்தேன் - நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்திய சினிமாவின் மிக பாடகராக விளங்கியவர், இவரின் குரலுக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர்.

கொரோனா தொற்று காரணத்தினால் சென்னை MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொரோனா சோதனை நெகடிவ் என வந்தது.

ஆனாலும் அவர் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு இருந்தார், நேற்று திடீரென்று இவரின் உடல்நிலை மோசமானதாக அறிக்கை வெளியானது.

அதனை தொடர்ந்து இன்று பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் திரையுலகை சேர்ந்த பலரும் எஸ்.பி.பி குறித்து பதிவிட்டு வருகின்றனர், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் எஸ்.பி.பி குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில் "இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில் தான் எனது நாள் தொடங்கியது, உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும், கண்ணீருடன் விடை தருகிறோம் உறங்குங்கள் எங்கள் குரல் அரசனே" என பதிவிட்டுள்ளார்.