Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்களில் நீர் வழிய கலை நாயகனுக்கு ஓர் படைப்பு! உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிமிக்க வீடியோ

பாட்டுத்தலைவன் என புகழப்படும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று காலமானார். அவரின் மரணம் ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கவிதையால் ஓர் ஆராதனை....

என்னவென்று சொல்வதம்மா...

மௌனத்தில் மூழ்கி...

வார்த்தைகளை வடித்து..

சொற்களை தொடுத்து..

பாலசுப்பிரமணியம் என்னும் இசை பாலகனுக்கு..

இச்சிறு கவிஞன் வினோத் ஆச்சார்யா சூட்டும் பாமாலை...

குரலில் இனிமை...

குரலில் மென்மை...

குரலில் வலிமை...

குரலில் தாய்மை..

குரலில் கருணை..

குரலில் கண்ணீர்...

குரலில் சக்தி..

குரலில் பக்தி..

உம் பாடல்கள் 60 களில் ஆராதனை...

உம் பாடல்கள் 70 களில் ஏகாந்த கீதம்...

உம் பாடல்கள் 80களில் காலத்தை வென்ற காவியம்..

உம் பாடல்கள் 90களில் இடைக்கால இன்னிசை..

உம் பாடல்கள் 2000மாம் ஆண்டுகளில் சினிமாவில் புதுரகம்...

உன் பாடல்கள் இனி எப்போதும் ஒலிக்கும் மௌனராகம்..

குரல் தேர்வில் நீ பாடிய பாடல்...

நிலவே என்னிடம் நெருங்காதே..

அதே நிலவை கொண்டு தமிழில்

ஆயிரம் நிலவே வா என ஒலித்த நினைவுகள் இன்னும்..

எத்தனை எத்தனை பாடல்கள்...

அவை அத்தனையும் ரசிகர்களுக்கு கிடைத்த சொத்துக்கள்..

இசையில் நீ வலையோசை..

கீதத்தில் நீ ராகங்கள் 16...

மொழியில் நீ மலரே மௌனமா..

காதலில் நீ காதல் ரோஜாவே..

பாடலில் நீ தீராத விளையாட்டு..

புகழில் நீ மை நேம் இஸ் பில்லா..

வாழ்வில் நீ கடவுள் அமைத்துவைத்த மேடை..

என்றும் உன் பாடல்கள் இளமை என்னும் பூங்காற்றே...

உன் தர்பார் இன்னும் முடியவில்லை...

பாடல்கள் மட்டுமல்லாது..

பல முகங்களுக்கு பின் குரலாக அமைந்தது உன் குரலே..

பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், கலைமாமணி என எத்தனையோ விருதுகள்.

உனக்கு சூட்டப்பட்ட சங்கராபரணமே..

தேசிய விருதுகள் உன் தேகத்தை அலங்கரித்தன..

இவை அத்தனையும் நாங்கள் உன்னில் உணர...

எங்களை தவிக்கவிட்டுச் சென்றோயோ பாடகா...

கண்ணீர் வழிந்து தலையணை நனைந்த போதும்..

உம் பாடல்கள் கண்களை துடைத்துவிடும் ஐயா..

பெயரில் இறை நாமத்தை கொண்டாய்..

வாக்கில் இறை சக்தியை பெற்றாய்..

ஆயிரக்கணக்கில் அமைந்த உம் பாடல்கள்..

அத்தனையும் இசைக்கு கிடைத்த மணி மகுடம்..

பாலசுப்பிரமணியம் என்ற ஓர் உயிர்..

பல வித பரிமாணமாய்..

இம்மண்ணில் பரந்து விரிந்த விருட்சம்...

வணக்கங்களுடன் விடைபெறும் நான் வினோத் ஆச்சார்யா..