Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எஸ்.பி.பிக்கு இறுதி சடங்குகள் துவங்கியது- Live Video

உலகமெங்கும் தனது குரலால் பல கோடி ரசிகர்களை சேர்த்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா காரணமாக உடல்நல குறைவால் நேற்று மதியம் 1.04 மணி அளவில் உயிர் இழந்தார்.

இவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அதன்பின் நேற்று இரவு 8.00 மணி அளவில் எஸ்.பி.பியின் உடல் தாமைரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ண வீட்டிற்கு எடுத்த வரப்பட்டுள்ளது.

இங்கு தான் எஸ்.பி.பி அவர்களின் இறுதி சடங்கு நடைபெறவிருக்கிறது. பல திரையுலக பிரபலங்கள் இங்கு வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது 10.20 மணி அளவில் எஸ்.பி.பியின் இறுதி சடங்குகள் துவங்கியுள்ளது. இதோ இறுதி சடங்கி புகைப்படங்கள்..