Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த விசயத்தை செய்துட்டு வா! வாய்ப்பு தரேன்! எஸ்.பி.பிக்கு ஸ்ட்ரிக்டான கண்டிசன் போட்ட நபர்

மறைந்த திரைப்பட பாடகர் எஸ்.பி.பி. தான் சினிமாவுக்குள் நுழைய வேண்டும், பெரிய பாடகராக வேண்டும் என்றெல்லாம் நினைத்து பார்த்ததே கிடையாது.

பாட்டுப்போட்டியில் அவரின் திறமையை கண்ட எஸ்.ஜானகியே அவரை வெளிக்கொண்டு வந்தார்.

அவரின் ஆசைக்காக தான் எஸ்.பி.பி சினிமாவில் முயற்சி செய்தாராம். பின் வாய்ப்பு கிடைக்காததால் படிப்பில் கவனம் செலுத்து தொடங்கிவிட்டாராம். அக்காலத்தில் அவருக்கு தெரிந்த மொழிகள் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மட்டுமே.

1960 ல் எஸ்.பி.பி தமிழுக்கு வருகை தந்த காலம். மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பாடிக்காண்பித்தாராம். ஆனால் தமிழில் மொழி உச்சரிப்பு விசயத்தில் கண்டிப்பாக இருந்திருக்கிறார் எம்.எஸ்.வி. மேலும் இவர் உன் தமிழ் சரியாக இல்லை. தமிழை நன்றாக கற்றுக்கொண்டு வந்தால் வாய்ப்பு தருகிறேன் என எஸ்.பி.பியிடம் கூறியுள்ளார்.

இதற்காக தமிழ் பேசுபவர்களிடம் அதிகம் பேசி பழகி தமிழை எழுத படிக்க கற்றுக்கொண்டாராம். பெரிய இசையமைப்பாளர் கொடுக்கப்போகும் வாய்ப்பு என்பதால் மிகுந்த முயற்சியுடன் தமிழை கற்றுக்கொண்டு வர எம்.எஸ்.வி இசையமைப்பில் சாந்தி நிலையம் படத்தில் இயற்கை என்னும் இளைய கன்னி என்ற பாடலை பாடினாராம்.