Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மைக்கை கையில் எடுத்ததும் எஸ்.பி.பி சொல்வது இது தான்! பிரம்மிக்க வைத்த செயல்

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரின் இறுதி சடங்குகள் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் நடைபெற்றது.

40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடிய அவரின் மறைவு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மேடைக்கச்சேரிகளில் பாடியுள்ள அவரின் கையில் மைக் விளையாடும் என்றே சொல்லவேண்டும்.

ஆனால் நிகழ்ச்சிகளின் போது மைக்கை கையில் எடுத்தால் அவர் முதலில் சொல்வது ஓம் என்னும் சொல் தானாம். நமக்கு பிடித்த தெய்வத்தின் பெயரை சொல்லி தொடங்கினால் நேர்மறையான ஆற்றல் பிறக்கும் என்பது அவரின் நம்பிக்கையாம்.

மற்றவர்களுக்கும் இதை சொல்லிக்கொடுத்திருக்கிறாராம்.