Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட்டாஸ், எதிர்நீச்சல் பட இயக்குனர் துரை செந்தில் குமார் வீட்டில் மரணம்..

நேற்று இந்திய திரையுலகையே மிகவும் உலுக்கிய சம்பவம் பாடகர் எஸ்.பி.பியின் மரணம். இன்று அவரின் உடல் எஸ்.பி.பியின் பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் எஸ்.பி.பியின் மறைவை தொடர்ந்து பிரபல இயக்குனர் துரை செந்தில் குமார் அவர்களின் தந்தை செல்வராஜ் என்பவர் இன்று மரணமடைந்துள்ளார்.

இயக்குனர் துரை செந்தில் குமாரின் தந்தைக்கு வயது 67 என்றும் இவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இயக்குனர் துரை செந்தில் குமார், சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கி சட்டை - தனுஷின் கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.