Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாழ்க்கை கொடுத்தவரையே மறந்தாரா அஜித்- எஸ்.பி. பிக்காக இதையாவது செய்திருக்கலாமே?

ஆகஸ்ட் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி நேற்று (செப்டம்பர் 25) நம்மை எல்லாம் விட்டு பிரிந்தார்.

அவரின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இளைய தளபதி விஜய் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

ஆனால் அஜித் சினிமாவில் முதன் முதலாக நடிகராக அறிமுகமாகக் காரணமாக இருந்த எஸ்.பி.பிக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை.

கொரோனா காரணம் வரவில்லை என்றாலும் ஒரு அறிக்கையாவது கொடுத்திருக்கலாம் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

எஸ்.பி.பி மகன் சரணும், அஜித்தும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். சிறு சிறு விளம்பரங்களில் நடிக்கும் போது சரணின் உடைகளை தான் அஜித் போட்டு செல்வாராம்.

அஜித்திற்கு முதல் படமான பிரேம புஸ்தகம் எனும் தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பே எஸ்.பி.பி அவர்களால் தான் கிடைத்தது.

அப்படி உதவியவருக்கு ஒரு இரங்கல் செய்தி கூட கொடுத்தவில்லையே என்பது பலரின் ஆதங்கம்.