Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய நாட்களில் தவறாது எஸ்.பி.பி கடைபிடித்து வந்த வழக்கம்! அவ்விடத்திற்கு அப்படி என்ன சிறப்பு

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடி இந்திய சினிமாவில் ஒரு தனி சாம்ராஜ்யம் செய்துவிட்டு சென்றுவிட்டார் எஸ்.பி.பி.

அவரின் மரணம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிட்டது. சென்னையில் இறந்தவரை திருவள்ளூர் தாமரைப்பாக்கம் செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை இல்லத்தில் அவரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்றும் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தாலும் இந்த பண்ணை இல்லத்திற்கு மாதந்தோறும் அல்லது முக்கிய நாட்களில் வருகை தந்து தங்கி செல்வது வழக்கமாம்.

14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் எஸ்.பி.பியின் தந்தை, தாயார், பாட்டி மற்றும் மாமியார் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாம். தங்கள் முன்னோர்கள் இருக்கும் இந்த இடம் எஸ்.பி.பிக்கு மிகவும் பிடித்த இடமாம்.

இன்று அவர்களோடு அவருக்கு பிடித்த இடத்திற்கே நிரந்தரமாக சென்றுவிட்டார்.