Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் முழு சொத்து மதிப்பு...

தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி, உடல்நல குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது.

எஸ்.பி.பி அவர்கள் தனது திரைப்பயணத்தில் சுமார் 42,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் தான் பாடம் பாடல்களுக்கு எப்போது அதிக சம்பளம் கூட வாங்கியதில்லையாம் எஸ்.பி.பி.

இந்நிலையில் சுமார் 50 ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து ரூ.120 கோடி மட்டுமே தனது சொத்தாக சேர்த்து வைத்துள்ளாராம் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உள்ள முன்னணி கதாநாயகர்களின் ஒரே படத்தின் சம்பளமே கிட்டத்தட்ட 50 கோடிக்கும் மேல் இருக்கும் நிலையில். 50 ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் இவ்வளவு தானா எஸ்.பி.பி சொத்து சேர்த்துள்ளாரா என பலராலும் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.