மாஸ்டர் பிரபலம் ஒருவருக்கு அனிதா சம்பத்தின் கணவர் கொடுத்த பதிலடி, சர்ச்சையை கிளப்பிய பதிவுகள்..
பிக்பாஸ் சீசன் 4 கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இதில் கலந்து கொண்ட பிரபலம் தான் அனிதா சம்பத்.
பிக்பாஸில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் சென்ற வாரம் நடைபெற்றது, இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் சொந்த கதை சோக கதையை கூறியிருந்தனர்.
இதில் அனிதா சம்பத் தனது கதையை கூறியிருந்தார், இதனையடுத்து பிரபல நடன இயக்குனரான சதிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “அனிதா சம்பத் உங்க கதை சோகமாவே இல்லை, ரொம்ப வேகமாக பேசுறீங்க, ரீ-கேப் பண்ணி பாத்த தான் புரியுது” என பதிவிட்டுயிருந்தார்.
Anitha pls story ya konjam slow VA peesunga . Recap panni pathan dhan puriyum polla . Eppa over fast. Sad feel varale enna puriyale. #bigbosstamil4
— Sathish krishnan (@dancersatz) October 8, 2020
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அனிதா சம்பத்தின் கணவர் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை போட்டுள்ளார் “ஏண்டா நீங்க பசின்னா என்னன்னு தெரியாம வளர்ந்து இருந்தா கண்டிப்பா உங்களுக்கு அடுத்தவன் பசியை தெரிய வாய்ப்பு இல்லை.
இப்படித்தான் அடுத்தவன் அனுபவிச்ச பசியையும் வலியும் கூட கிண்டல் பண்ண தோணும். டான்ஸ் மாஸ்டர்ன்னா டான்ஸ் ஆடலாம், ஆணவத்துல ஆடாதிங்கடா” என கூறியுள்ளார்.