Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜென்டில்மேன் திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், இதுவரை பலரும் கவனித்திராத காட்சி..புகைப்படத்துடன் இதோ..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கருக்கு முதல் திரைப்படமே பிளாக் பஸ்டராக அமைந்தது.

மேலும் இப்படத்தில் கவுண்டமணி, மதூ, செந்தில், மனோரமா, நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது.

அப்போதே பெரிய அளவு பட்ஜெட்டில் உருவான இப்படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வசூல் சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் தற்போது ரசிகர்களிடம் வில்லனாகவும் காமெடியனாகவும் மிக பிரபலமாக இருப்பவர், மொட்டை ராஜேந்திரன். அவர் இப்படத்தில் அடியாள் வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் ஆரம்பகாலத்தில் இப்படத்தில் நடித்ததால் பார்ப்பதற்கு இளமையாக உள்ளார். தற்போது அதில் அவர் நடித்துள்ள காட்சியின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.