Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

100 க்கும் அதிகமான படங்களில் பணியாற்றிவர் மரணம்! யாரும் செய்யாத அந்த பெருமைக்குரியவர் காலமானார்

சினிமா படங்களில் முக்கிய சாதனைகளை நிகழ்த்திவிட்டு வெளியே தெரியாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் தான் அவர்களை தெரிந்துகொள்ள முடிகிறது.

அவ்வகையில் தற்போது மும்பையை சேர்ந்த பழம்பெரும் ஆடை வடிவமைப்பாளர் பானு ஆதெய்யா நேற்று காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் போராடி வந்த அவருக்கு வயது 91. சிஜடி என்ற படத்தின் மூலம் ஆடைவடிவமைப்பாளராக அறிமுகமாகி 50 ஆண்டுகள் சினிமாவில் இருந்தவர்.

100க்கும் அதிகமான படங்களில் பணியாற்றியுள்ளார்.

1990 ம் ஆண்டு வந்த லெக்கின் மற்றும் 2001 ல் வந்த லகான் ஆகிய படங்களுக்காக தேசிய விருது பெற்றவர் காந்தி படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றார்.

மேலும் ஆஸ்கார் விருது வென்ற முதல் இந்தியர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.