கொரோனா ஊரடங்கால் பலரின் ஆடம்பர திருமணங்கள் தவிர்க்கப்பட்டு எளிமையான முறையில் நிகழ்த்த வேண்டிய கட்டாயமாக இருந்தாலும் பல நல்ல விசயங்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது.
சினிமா, சீரியல் பிரபலங்களின் திருமணம் அண்மையில் நிகழ்ந்தது. அடுத்த திருமணமாக மலையாள டிவி சீரியல், சினிமா நடிகை சரண்யா ஆனந்த் தயாராகியுள்ளார்.
ஆடை வடிவமைப்பாளர், நடன இயக்குனர், மாடல் என பல திறமைகள் கொண்ட அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மாமாங்கம் படத்தில் நடித்திருந்தார்.
நீண்ட நாளாக தான் காதலித்து வந்த மனேஷ் ராஜன் நாயரை திருமணம் செய்யப்போகிறாராம்.
இதனை முன்னிட்டு நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது. இந்த மகிழ்வான தருணத்தில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.