தற்கொலைக்கு துணிந்த நடிகை! யாருக்கும் வரக்கூடாத நோய்! உயிரைக்காப்பாற்றிய ஜீவன் இவர் தான்! வாழ்க்கையில் சோகம்
திரையில் அழகாக தோன்றும் சினிமா கலைஞர்களின் சொந்த வாழ்க்கை பின்னணியில் ஏதாவது சோகமான காலகட்டங்களும் இருக்கிறது. கண்ணீர் விட வைக்கும் சம்பவங்களும் உண்டு.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி 50 க்கும் அதிகமான படங்களில் நடித்து வந்தவர் சனுஷா. தமிழில் ரேணிகுண்டா படத்தில் தான் இவருக்கு அறிமுகமானார். அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் என சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டம் இவரின் வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது. தொழில் நஷ்டம். இதனால் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி பயமுறுத்தியதோடு மன அழுத்த பிரச்சனையால் தவித்துள்ளார்.
உறவுகள், நண்பர்கள் யாரும் அருகில் இல்லாததால் பிரச்சனைகளை மனம் விட்டு பேச கூட ஆளில்லையாம். தற்கொலை முடிவெடுத்து பின் தன் தம்பியை யார் காப்பாற்றுவார் என்ற எண்ணம் வர மனநல மருத்துவமனையை நாடியுள்ளார்.
மன அழுத்தம் சாதாரண பிரச்சனை இல்லை. அதை கண்டுகொள்ளாவிட்டால் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என் மற்றவரகளுக்கு ஆலோசனையும் கூறுகிறார் சனுஜா.