தனது காதலியுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் முகின், வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள் இதோ..
மலேசியாவை சேர்ந்த பாடகரான பிக்பாஸ் முகின் பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு டைட்டில் வின்னராகவும் ஆனார்.
அதனை தொடர்ந்து ரசிகர்களிடையே பிரபலமான முகின் தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில் நேற்று பிக்பாஸ் முகினின் பிறந்தநாள் என்பதால் பல பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து இருந்தனர்.
மேலும் முகின் அவரின் காதலியான யாஸ்மின் நதியாவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார், அதுமட்டுமின்றி அவர்களின் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.