பிக்பாஸ்ல பாடகி சுசித்ரா வரபோவது உறுதியாகிடுச்சோ! ட்விஸ்ட் காட்டும் சீக்ரட் வீடியோ இதோ
பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி மூன்று வாரங்களை கடந்துவிட்டது. இந்நிகழ்ச்சியில் இருந்து குறைவான வாக்குகள் பெற்று வெளியேறிய முதல் போட்டியாளர் நடிகை ரேகா.
இதற்கிடையில் நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனாவும் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் போட்டியாளராக உள்ளே வந்தார். அடுத்த வார வெளியேற்றப்படலும் தொடர்ந்து வருகிறது. இதில் பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா, ஆரி ஆகியோர் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த வீட்டில் அடுத்த போட்டியாளராக வைல்ட் கார்ட் எண்டிரியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியும் பாடகியுமான சுசித்ரா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுசித்ராவின் வாழ்க்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனைகளால் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர் பின் மனநல சிகிச்சை எடுத்து வந்ததோடு, வெளிநாட்டில் சமையல் கலை கற்கவும் சென்றார். அவர் மீண்டும் இந்நிகழ்ச்சியின் மூலம் திரைக்கு வந்தால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. ம்ம்ம்ம்...
இதுகுறித்து அவர் ஏதும் இதுவரை கருத்து தெரிவிக்காத நிலையில் அவர் தற்போது துணிகளை பேக் செய்து ரெடியாவது போல டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளது ரசிகர்களை மேலும் சந்தேகமாக்கியுள்ளது.
Wishful thinking: if the ghosts of #SteveJobs , #SPBalasubrahmanyam and #SushantSingh got together in outer space like Avengerss and fought off all Aliens trying to mess with us, it wd be amaze ♥️🔥#MissYouTikTok 💔😰 pic.twitter.com/uAjOMgTLsy
— Suchitra (@suchi_ramadurai) October 22, 2020
பொறுத்திருந்து பார்ப்போம்...