Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொட்டில் விலை இத்தனை லட்சமாம்! பிறந்த குழந்தைகாக நடிகை வாங்கியது! மேலும் ஒரு அதிசயம்

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன் என்ற பாடல் பலரின் மனதில் காதல் அலைகளாக ஓடிக்கொண்டிருந்தது ஒரு காலம். இப்பாடலில் வந்த ஹீரோயின் மேக்னா ராஜ்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அவரின் கணவரான நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார். அப்போது மேக்னா 4 மாத கால கர்ப்பம் தரித்திருந்தார்.

அண்மையில் அவருக்கு வளைகாப்பும் நடைபெற்றது. அப்போது சிரஞ்சீவியின் ரசிகர்கள் சிரஞ்சீவியின் படம் கொண்ட ஆளுயர கட்டவுட்டை மேக்னா அருகில் வைத்து அவருக்கே சர்ப்பிரைஸ் கொடுத்தனர். பார்ப்பதற்கு ஒரிஜினலாக சிரஞ்சீவி நிற்பது போலவே இருந்தது.

இந்நிலையில் நேற்று மேக்னாவுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அதுவும் இவர்களுக்கு திருமண நிச்சயதார்தம் நடைபெற்ற தேதியிலேயே தான் பிறந்துள்ளது மகிழ்ச்சியளித்துள்ளது.

அந்த ஆண் குழந்தைகாக ரூ 10 லட்சம் வெள்ளி தொட்டில் வாங்கியுள்ளார்களாம்.