Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நைனா இங்கேயும் வந்துட்டாரா! வனிதாவை தொடர்ந்து பிக்பாஸ் மோகன் வைத்யா! படையெடுக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் ஆஜித் வெளியேற்றப்படவேண்டியது, ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்பெஷல் பாஸ் மூலம் அவர் காப்பாற்றப்பட்டு மீண்டும் வீட்டில் தங்க வைக்கப்பட்டார். காரசாரமான விவாதங்கங்கள், சண்டைகள் என்றால் கடந்த சீசனை சொல்லியே ஆகவேண்டும்.

கடந்த சீசனில் வனிதா டான் போல சுற்றி வந்தார், அவருக்கு வத்திக்குச்சி வனிதா என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. பல பிரச்சனைகளுக்கு நடுவே அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது கடந்த பிக்பாஸ் சீசன் 3 ந் மற்றொரு போட்டியாளரான மோகன் வைத்யா பாரதிய ஜனதா கட்சியில் அக்கட்சி மாநில தலைவர் முருகன் முன்னியிலை இணைந்துள்ளார்.

நமீதா, காயத்ரி ரகுராம் என பிக்பாஸ் பிரபலங்கள் அக்கட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.