சிவகார்த்திகேயனின் ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்
சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் சிறுவர்களையும் கவர்ந்த ஒரு படம் ரெமோ.
ஏனெனில் இதில் பெண் வேடம் போட்டு சிவகார்த்திகேயன் நடித்திருந்தார், அவரது அந்த கதாபாத்திரத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் பாக்யராஜ் கண்ணன். ரெமோ படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து சுல்தான் என்ற படத்தை இயக்கியுள்ளார். படமும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இன்று ஃபஸ்ட் லுக் வெளியாகிறது.
தற்போது பாக்யராஜ் ஆஷா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் வேலூரில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதோ அவரது திருமண புகைப்படம்,
Our #Prince @Siva_Kartikeyan anna at #Remo director @Bakkiyaraj_k's wedding 🤩 Wishing the couple a happy married life on behalf of all our #PrinceSK anna fans 💐💐💐 pic.twitter.com/4IW2RKWTG9
— All India SKFC ᴰᵒᶜᵗᵒʳ (@AllIndiaSKFC) October 26, 2020