Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீ வைத்து கொளுத்திய Youtube பிரபலம்! விபரீதமான செயல் - வேகமாக பரவிய வீடியோ

Youtube ல் பலர் பிரபலங்களாக இருக்கிறார்கள். இன்று பலரும் Youtube ல் சானல் வைத்திருப்பதை காணமுடிகிறது. அதன் மூலம் பலர் வருமானம் ஈட்டியும் வருகின்றனர்.

தற்போது ரஷ்யாவை சேர்ந்த Youtube பிரபலமான மிகைல் லிட்வின் ரூ 2.42 கோடி மதிப்புள்ள பென்ஸ் காரை தீ வைத்து கொளுத்தி வெளியிட்ட வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விசயம் என்ன வெனில் அவர் தான் வாங்கிய அந்த காரில் சிறு கோளாறுகள் இருந்ததால் அதை சரி செய்து தருமாறு டீலர்களுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் 5 முறை அவர் இப்படி செய்த போதும் அவர் ஏதோ ஒரு காரணம் சொல்லி சரி செய்யாமல் அப்படியே திரும்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் மிகவும் கோபமான அவர் இப்பிரச்சனைக்கு முடிவு கட்ட தான் தீயிட்டு கொளுத்தியதாக தெரிகிறது. இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரத்திலேயே அதிகமானோரின் கண்களில் சிக்கியுள்ளது.