Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive : இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிக்கவுள்ள முக்கிய நடிகர், தளபதி விஜய்யுடன் கூட்டணி இல்லையா?

இயக்குனர் மகிழ் திருமேனி தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர், முன்தினம் பார்த்தேனே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தடையர் தாக்க, மீகாமன் உள்ளிட்ட சிறந்த திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமானார்.மேலும் இவர் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் பிளாக் பஸ்டராக அமைந்தது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். இந்த தகவல்கள் நமது சினிஉலகம் சார்பில் விசாரித்த போது தெரியவந்துள்ளது.