இயக்குனர் பாலாவின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ள இரண்டு முன்னணி வாரிசு நடிகர்கள், வெளியான புதிய தகவல்..

பிரபலம் by Jeeva
Topics : #Bala

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர், இவரின் திரைப்படங்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கடைசியாக இவர் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்த வர்மா திரைப்படம் சில காரணங்களால் திரைக்கு வராமல் போனது.

மேலும் சமீபத்தில் இப்படம் OTT தளம் ஒன்றில் வெளியாகி மோசனமான விமர்சங்களை பெற்றிருந்தது. இவரின் ரசிகர்கள் அனைவரும் இவரிடமிருந்து ஒரு நல்ல திரைப்படத்தை எதிரிபார்த்து கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில் இவர் அடுத்ததாக இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகர்கள் அதர்வா மற்றும் உதயநிதி ஸ்டாலினை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

மேலும் இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.