மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்காக பிரபல தொலைக்காட்சியில் ஸ்பெஷல் ஷோ- கண்ணீர்விட்டு அழுத சரண்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களை பிடிக்காதவர்களே கிடையாது. தனது பாடல் மூலம் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்தவர், இனியும் அவரது பாடல்கள் ரசிகர்களிடம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
எஸ்.பி.பி அவர்கள் பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அதிகம் வந்துள்ளார். எப்போதும் சிரித்த முகத்துடன் பாடுபவர்களை ஊக்கப்படுத்துவார்.
அவரை நினைவுகூர்ந்து சூப்பர் சிங்கர் குழுவினர் எஸ்.பி.பிக்காக ஒரு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதில் பாடகர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது வருத்தத்தையும், நினைவுகளையும் பகிர்ந்துள்ளனர்.
அதையெல்லாம் பார்த்த எஸ்.பி.பி அவர்களின் மகன் சரண் நிகழ்ச்சி கண்ணீர்விட்டு அழுகிறார். இதோ அந்த புரொமோ வீடியோ..
SPB ஒரு காவியம் - வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #SPBOruKaaviyam #VijayTelevision pic.twitter.com/SLV6evGl5u
— Vijay Television (@vijaytelevision) November 2, 2020