Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவுக்கு நெருக்கடி! நேரில் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள்! அதிரடி நடவடிக்கை

பல விமர்சனங்களுக்கு இடையில் நடிகர் சிம்பு தன் தோற்றத்தை மாற்றி உடல் எடையை குறைத்து மாஸ் காட்டிவிட்டார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஈஸ்வரன் படத்திற்காக தான் இப்படி ஒரு கெட்டப்.

அண்மையில் அவர் பாம்பை கழுத்தில் போட்டு பிடித்திருப்பது போலவும், மரத்தில் இருந்த பாம்பை பிடித்து சாக்குப்பையில் போடுவது போலவும் வீடியோ மற்றும் போட்டோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

இதனால் வன விலங்கை துன்புறுத்துவதாக சுசீந்திரன் மற்றும் சிம்பு மீது நடவடிக்கை எடுக்கும் படி வனவிலங்கு நல ஆர்வலர் கிருஷ்ண மூர்த்தி சென்னை கிண்டி வனத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிம்பு அணிந்திருந்தது பிளாஸ்டிக் பாம்பு, நிஜ பாம்பு போல கிராஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என இயக்குனர் தெரிவிக்க அதற்கு ஆதாரங்கள், ஆவணங்களை சமர்பிக்கும் படி வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியும் ஒரு வாரமாக எந்த பதிலும் அவர்கள் கொடுக்கவில்லையாம்.

இதனால் சிம்பு மற்றும் இயக்குனரின் வீட்டிற்கு நேரில் சென்று 2 வது முறையாக நோட்டீஸ் வழங்கியுள்ளனர். உரிய காலத்தில் பதிலளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனராம்.