Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் பிறந்த பாடகர் எஸ்.பி.பி! ஒன்று கூடிய சீரியல், சினிமா நடிகர்கள், நடிகைகள்! போட்டோ இதோ

கடந்த செப்டம்பர் 25 ல் பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ்.பி.பி காலமானார். அவரின் மறைவு பெரும் சோக அலைகளை திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

அவரின் சமாதியில் நினைவிடம் கட்ட வேண்டும் என ரசிகர்கள் ஒருபக்கம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் South Indian Cine, Television Artistes and Dubbing Artistes Union எஸ்.பி.பியின் பெயரில் புதிய டப்பிங் ஸ்டூடியோ ஒன்றை இன்று திறந்துள்ளது. நிகழ்ச்சியில் டப்பிங் யூனியன் தலைவர் நடிகர் ராதா ரவி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

எஸ்.பி.பி இந்த யூனியனில் உறுப்பினராக இருந்தவர். அவருக்கு மரியாதை செய்யும் வகையில் இந்த ஸ்டூடியோவை திறந்துள்ளதாக யூனியன் கூறியுள்ளது.

இதில் சினிமா மற்றும் டிவி நடிகர்கள், நடிகைகள் கலந்துகொண்டனர். எஸ்.பி.யின் குரலின் பெருமை பறைசாட்டும் விதமாக புதிதாக ஓரு உரு பிறந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.