நிவர் புயலுக்கு நடுவில் மாஸ்டர் பட புகழ் லோகேஷ் கனகராஜ் எடுத்த புகைப்படம்- எவ்ளோ தைரியம்
விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கியதன் மூலம் பலரின் கவனத்திற்கு வந்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.
படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி அனைவரையும் மிரள வைத்தது.
தற்போது தமிழ்நாடே நிவர் புயலின் பாதிப்புகளை நினைத்து அச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் இருவரும் பாண்டிச்சேரி பீச்சில் புகைப்படம் எடுத்துள்ளார்.
ரத்னகுமார் தனது பதிவில் நிவர் புயலுடன் ஒரு செல்பி என பதிவு செய்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் பயந்து வீட்டில் இருக்க பீச்சில் புகைப்படமா செம தைரியம் இவருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.