பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மரணம்! பிரபல நடிகர் சோகத்துடன் வெளியிட்ட பதிவு! ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நபர்!
சினிமாவில் இந்த ஆண்டு பலரின் மரணங்களை சந்தித்துவிட்டது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடிகர் ரிஷி கபூர், இர்ஃபான் கான், நடன இயக்குனர் சரோஜ் கான், இயக்குனர் வாஜித் கான், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அண்மையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தற்போது வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பாளரும், தமிழ் பேச்சாளரும், விளையாட்டு நிகழ்ச்சி வர்ணனனையாளும் சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் காலமானதான தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கு கமல் ஹாசன் டிவிட்டரில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
1980, 90 களில் பெரும் ரசிகர்கள் கூட்டம் தமிழ் நாடு மற்றும் இலங்கையில் இருந்தது. இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டின் சாத்தான்குளம் இவருக்கு பூர்வீக மண்.
இலங்கையில் உயர் கல்வி பயின்ற அப்துல் ஜப்பார் சில புத்தகங்களையும் எழுதியுள்ளதும், ESPN, Neo Sports, Sun Tv, Zee Tv ஆகிய டிவிகளில் பணியாற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வானொலியில் விளையாட்டு வர்ணனைகளுக்குப் புதிய அழகியலைச் சேர்த்தவரும், உலகத் தமிழரிடையே அன்றாடம் அழகிய தமிழ் பேசிய ஒலிபரப்பாளருமான சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மறைந்தார். அஞ்சலி.
— Kamal Haasan (@ikamalhaasan) December 22, 2020