சினிமா படங்களில் ஐட்டம் பாடல் ஒரு தனி செக்மெண்ட் போலாகிவிட்டது. ஒரு காலத்தில் அநேக படங்களிலும் காணப்பட்ட இப்பாடல்கள் மீதான மோகம் தமிழ் சினிமாவில் தற்போது மாறிவிட்டது. நல்ல கதைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றியடைகின்றன.
ஆனால் தெலுங்கு சினிமாவின் ஐட்டம் பாடல் கலாச்சாரம் இன்றும் தொடர்ந்து வருகிறது. இப்பாடலில் ஆடும் நடிகைகளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள். நடிகை தமன்னா, ஸ்ருதி ஹாசன் என சில நடிகைகள் இதில் கோடியில் சம்பாதிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் ராம் பொத்தினேனி Dinchak படத்தின் Dinchakபாடல் youtubeல் வெளியாகி 18 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகளையும், தற்போது 5 மில்லியன் பார்வைகளையும், 100K லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. அவருடன் Hebah Patel இப்பாடலில் ஆடியுள்ளார்.