மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் தளபதி 65 படத்தில் இணையும் பிரபலம்.. அவரே வெளியிட்ட தகவல்..
தளபதி விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தனது 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஒப்படைத்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜே ஹேக்டே, மற்றும் வில்லனாக அருண் விஜய் நடிக்க போகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து சூப்பர் சிங்கர் பூவையார் தளபதி 65 படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடிக்க போகிறராம்.
ஏற்கனவே பிகில் திரைப்படத்தில் வெறித்தனம் பாடலில் பூவையார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பூவையார் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
I'm very happy to have the opportunity to reunite with my Annan @actorvijay in #Thalapathy65 Thank you very much @Nelsondilpkumar na 😍
— Poovaiyar Official (@PoovaiyarOffl) January 19, 2021