விஜய்க்கு ஒரு சுறா மாதிரி, ஜெயம் ரவிக்கு பூமி.. கலாய்த்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்..
தளபதி விஜய்யின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து, படு தோல்வியடைந்த திரைப்படம் சுறா.
இதே போல் ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் திரை வாழ்க்கையில் சில திரைப்படங்கள் படு தோல்வியை கண்டிருக்கும்.
அந்த வகையில் ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படம் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.
இதில் " நான் பார்த்ததில் ஒரு மோசமான திரைப்படம் பூமி. சுறா, ஆல்வார், அஞ்சான், ராஜபாட்டை வரிசையில், பூமி " என மோசமாக விமர்சித்து கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த இயக்குனர் லக்ஷ்மணன் " இந்த படத்தை, நமலுடைய அடுத்த தலைமுறைக்காக தான் எடுத்தேன். ரோமியோ ஜூலியட் படம் எடுக்க தெரிந்த எனக்கு, கமர்ஷியல் தெரியாதா. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும். நீங்க ஜேச்சுடீங்க, நான் தோத்துட்டேன்." என்று பதிலடி கொடுத்த கூறியுள்ளார்.