Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மே 10ம் தேதி வெளியாகிறது ஏப்ரல் பூல்

ஜகபதி பாபு மற்றும் பூமிகா ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் படம் ஏப்ரல் பூல். கே.எஸ்.ஐ இந்த படத்தை இயக்க, ஜி.எல். ஸ்ரீநிவாஸ் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.

அதனால் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் மே மாதம் 10ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தில் ஜகபதி பாபு மற்றும் பூமிகா நடிக்கும் காட்சிகளில் எல்லாம் கொஞ்சம் புதுமையாக காமெடி காட்சிகளுடன் உருவாக்கி இருக்கிறார்களாம்.

பன்டி இப்படத்திற்கு இசையமைக்க, குல்ஷான் கிரோவர், ரல்லாபல்லி, தகுபோது ரமேஷ் மற்றும் தன்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.