Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியுடன் ஜகபதி பாபு

லெஜன்ட் படம் மூலம் தனது சினிமா பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ள ஜகபதி பாபுவுக்கு தற்போது படம் வாய்ப்புகள் வந்து குவிகின்றனவாம்.

அந்த வகையில் ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்க இருக்கும் புதிய படத்தில் ஜகபதி பாபு நடிக்க உள்ளாராம்.

இது பற்றி ஜகபதி பாபு, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜகபதி பாபு தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்திலும், மஞ்சு மனோஜ் நடிக்கும் படத்திலும் நடித்துள்ளார்.

2008ம் ஆண்டு ஜகபதி பாபு மற்றும் ரஜினி சேர்ந்து கதாநாயகுடு படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.