Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மஜா கூட்டணி மீண்டும் இணைகிறது!!!

விக்ரம் அடுத்து "கோலிசோடா" விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அப்படா!!! ஒரு வழியாக "ஐ" படத்தில் அவர் நடிக்கும் காட்சிகளை எல்லாம் நடித்து முடித்து விட்டார் நம்ம சீயான், ஆனால் படம் எப்போ வரும்??? அது அவருக்கே தெரியாது!!!.

தற்போது அதையெல்லாம் மறந்து தன் அடுத்த படத்திற்கு ரெடியாக விட்டார் விக்ரம். இதில் இவருக்கு ஜோடியாக முதன் முறையாக சமந்தா நடிக்க உள்ளார்.

இப்போது கூடுதலாக ஒரு தகவலும் வந்துள்ளது, அது என்னவென்றால் "தூள்", "மஜா" என இவருடன் சேர்ந்து கலக்கிய பசுபதி தான் இதிலும் நடிக்க இருக்கிறார், அதுவும் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

"பசுபதி வில்லனா??? இல்லை நண்பரா???".