Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 58வது படத்தின் சுவாரஸ்யம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் நாள்தோறும் வந்து கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் தனது 58வது படத்தை இயக்குனர் சிம்பு தேவனுடன், விஜய் கைகோர்க்க இருப்பது நமக்கு தெரியும்.

மேலும் இந்த படத்தில் நிறைய பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. அந்த வகையில் சுதீப், ஸ்ரீதேவி, தீபிகா படுகோனே மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் இப்படத்தில் கமிட்டாகியிருப்பதாக செய்தி வந்துள்ளது.

இதில் சுதீப் மட்டும் தான் விஜய்யின் 58வது படத்தில் நடிக்க போவதாகவும், அந்த கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்ருதிஹாசன் விஜய்யுடன் நடிக்கும் முதல் படம் இதுதான். 16 வயதினிலே ஸ்ரீதேவியும் விஜய்யுடன் நடிக்கும் முதல் படம் இது.