Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐ படத்தில் பாலிவுட் நாயகன்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிக் கொண்டிருக்கும் ஐ படத்தில் மாடல் மற்றும் நடிகரான சாஜித் புபேரே என்ற பாலிவுட் நாயகன் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான யாரியான் என்ற படத்தில் முரடான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவர் ஐ படத்தில் எமி ஜாக்சனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம். இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில், ஷங்கர் இயக்கத்தில் என்னுடைய முதல் தமிழ் படமான ஐ படத்தில் நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த படத்தில் எமி ஜாக்சன் சூப்பர் மாடல் அழகியாக நடித்துள்ளார், மேலும் இப்படத்தில் நான் சுரேஷ் கோபி அவர்களுடன் ஒரு சண்டை காட்சிகளில் நடித்துள்ளேன் என்று கூறினார்.

ஐ படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.